மார்கழி மாத பஜனை ஆர்வத்துடன் பங்கேற்பு
ADDED :1753 days ago
ஆனைமலை:ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடிக்கொண்டு, சிறுவர்கள் ஊர்வலமாக சென்றனர்.மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து, திருப்பாவை, திருவெம்பாவை பாடி, இறைவனை வழிபடுவது வழக்கம். மார்கழி துவங்கியதால், தமிழகம் முழுவதிலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள், பஜனை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, உலகநல வேள்விக்குழு, நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் மற்றும் மக்கள் இணைந்து, சோமந்துறைசித்துார், கோட்டூர், தென்சங்கம்பாளையம், ரமணமுதலிபுதுார் உள்ளிட்ட பகுதிகளில், மார்கழி பஜனை பாடி, ஊர்வலமாக செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில், பக்திப்பாடல்கள் பாடியும், பஜனை ஊர்வலம் நடத்துகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பலரும், ஆர்வத்துடன் பங்கேற்று பக்திப்பாடல்கள் பாடுகின்றனர்.