தை அமாவாசை முன்னிட்டு, பூம்புகாரில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் அமாவாசை தோறும் ஏராளமான மக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகளை நடத்தி தானம், தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
தை அமாவாசை தினமான இன்று அதிகாலை 1:20 க்கு தொடங்கி நாளை அதிகாலை 2:31 வரை அமாவாசை திதி உள்ளது. சூரிய உதயத்திற்கு பின்பு காலை 6 மணி முதல் 12 மணி வரை தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களது ஆசியும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் கிடைக்கும். கடற்கரை மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்தது.
இதனால் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் பூம்புகார் சங்கமத்துறையில் திரண்டு கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு வேதியர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் துணை கொண்டு பலி கர்ம பூஜைகள் நடத்தி அரிசி, காய்கறிகள், தானியங்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை தானமாக கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். தை அமாவாசையை முன்னிட்டு கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
இதுபோல திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள ருத்ரபாதம் அருகே நூற்றுக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்
மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்