மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல் வழிபாடு
ADDED :45 minutes ago
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் காணும் பொங்கலை முன்னிட்டு திருவிழா நடந்தது. இதையொட்டி, காலை 10:00 மணிக்கு விநாயகர், ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், தனிஅம்மன், சண்டிகேஸ்வரர், வள்ளி தேவசேனா சுப்பரமணியர் ஆகிய உற்சவர் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது.
மதியம் 1:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடந்து,பூஜையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு கலச அபிஷேகம் நடந்தது. இரவு 10:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து,பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.