உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி மகோத்சவ நிறைவு விழா: இன்று மாஜி கவர்னர் பங்கேற்பு

மார்கழி மகோத்சவ நிறைவு விழா: இன்று மாஜி கவர்னர் பங்கேற்பு

சேலம்: சேலம் மாவட்ட, சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற சங்கம் சார்பில், எட்டாம் ஆண்டு, மார்கழி மகோத்சவ மூன்று நாள் விழா, கடந்த, 8ல் தொடங்கியது. அதன் நிறைவு நாளான இன்று, மாலை 6:00 மணிக்கு, பாரம்பரிய கலைகளான சிலம்பம், கோலாட்டம் மட்டுமின்றி, நிருத்யாலாயா பரதநாட்டிய பள்ளி பூர்ணிமா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு விழாவில், மேகாலயா, மணிப்பூர், அருணாசல பிரதேச கவர்னராக இருந்த சண்முகநாதன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !