திருச்செந்துார் வெங்கடாசலபதிக்கு ரூ 12.50 லட்சத்தில் வெள்ளி அங்கி
ADDED :1829 days ago
துாத்துக்குடி: போடியை சேர்ந்தவர் திருச்செந்துார் முருகன் கோயில் வெ ங்கடாஜலபதிக்கு ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ 800 கிராம் எடையுள்ள வெள்ளி அங்கியை வழங்கினார். தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் கிருபாகரன். இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். திருச்செந்துார் முருகன் கோயிலில் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ 800 கிராம் எடையுள்ள வெள்ளி அங்கியை காணிக்கையாக வழங்கினார். கோயில் இணை ஆணையர் ( பொறுப்பு ) கல்யாணி பெற்றுக்கொண்டார். உள்துறை கண்காணிப்பாளர் ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.