உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் அமாவாசை நிகும்பலா யாகம்

அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் அமாவாசை நிகும்பலா யாகம்

மயிலாடுதுறை: அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நடந்த நிகும்பலா யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ராவணன் மகன் மேக நாதனும், பஞ்சபாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வரங்களை பெற்றுள்ளனர். எட்டு திக்கும் மயானத்தால் சூழப்பட்ட இக்கோயிலில் அமாவாசை அன்று மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பானது. யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை பிரார்த்தனை செய்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவர். மார்கழி மாத அமாவாசையான இன்று அய்யாவாடி கோயிலில் நிகும்பலா யாகம் நடைபெற்றது. அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் ஜபங்கள் நடத்தப்பட்டன. மதியம் 1 மணிக்கு தண்டபானி குருக்கள் யாக குண்டத்தில் மிளகாய் வற்றலை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. யாகத்தில் திளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !