உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்

கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

துடியலூரில் உள்ள குபேர ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜையுடன் அனுமன் ஜெயந்தி விழா தொடங்கியது. அனுமன், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அனுமனை வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. இதேபோல, தொப்பம்பட்டி அருகே உள்ள ஜங்கம நாயக்கன்பாளையம் நவாம்ச ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, பாலமலை அரங்கநாதர் கோவில், பெரியநாயக்கன்பாளையம், திருமலை நாயக்கன் பாளையம், நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில்களில் உள்ள அனுமன் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !