வீரக்குமாரசுவாமி தங்ககவசம் அணிந்து சிறப்பு பூஜை
ADDED :1824 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் பிரசித்தி பெற்ற வீரக்குமார் சுவாமி திருக்கோவிலில் நேற்று மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
நேற்று மதியம் உச்சிகால பூஜையில் சந்தனகாப்பு அலங்காரத்தில் வீரக்குமார சுவாமி தங்க கவசம் அணிந்து அருள்பாலித்தார். மகா தீபாராதனை தீர்த்தம் தெளித்தல், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7.30 மணி அளவில் உற்சவர் சப்பாரத்தில் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்தது. இதேபோன்று வீரசோழபுரம் அடஞ்சாரம்மன் கோவில், மொண்டிக் கருப்பண்ணசாமி கோவில், யானைமேல் அழகியம்மன் கோவில், முருகங்காட்டு வலசு தம்பிகலையசாமி கோவில் கண்ணபுரம் மாரியம்மன் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் அமாவாசை சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.