உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளகோவில் வானர ராஜசிம்மன் ஜெயந்தி பெருவிழா

வெள்ளகோவில் வானர ராஜசிம்மன் ஜெயந்தி பெருவிழா

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையம் ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி பெருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.

நேற்று காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. காலை 7 மணிமுதல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நட்சத்திர ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், சனி பரிகார ஹோமம், பவமான மூலமந்திர ஹோமம், பூர்ணாஹுதி சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணியளவில் உற்சவர் புறப்பாடு விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். கரூர் திருப்பூர் காங்கயம் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் காலை முதல் இரவு வரை வந்து தரிசனம் செய்து அருள் பெற்றுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !