உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகதுருகத்தில் அனுமன் ஜெயந்தி விழா

தியாகதுருகத்தில் அனுமன் ஜெயந்தி விழா

தியாகதுருகம்: தியாகதுருகத்தில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டி அருகில் எழுந்தருளியுள்ள வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. சந்தனகாப்பு அலங்காரம் செய்து மலர் மற்றும் வடைமாலை சாற்றி அர்ச்சனைகள் நடந்தது. மகா தீபாராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். அதேபோல் பெருமாள் கோயில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !