காஞ்சிபுரம் விஷ்ணு துர்க்கையம்மனுக்கு ஊஞ்சல் சேவை உத்சவம்
ADDED :22 hours ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் நடந்தது.
காஞ்சிபுரம் கீழ்கேட், சின்னசாமி நகரில், விஷ்ணு துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாசி மாத அமாவாசையான இன்று காலை, மூலவர் துர்க்கையம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் நீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் துர்ககையம்மன் மலர் அலங்காரத்தில், ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.