உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துாத்துக்குடி பூவனநாத சுவாமி கோவில் தேரோட்டம்: ஒன்றாக வடம் படித்த 3 வேட்பாளர்கள்

துாத்துக்குடி பூவனநாத சுவாமி கோவில் தேரோட்டம்: ஒன்றாக வடம் படித்த 3 வேட்பாளர்கள்

துாத்துக்குடி: கோவில் தேரோட்டத்தில் பா.ஜ., மாநில தலைவரும், வேட்பாளருமான நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க., வேட்பாளர் கடம்பூர் ராஜு, தி.மு.க., வேட்பாளர் கருணாநிதி ஆகியோர் ஒன்றாக பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.


துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில், பங்குனி பெருந்திருவிழா, ஏப்., 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 9ம் நாளான இன்று திருத்தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளருமான கடம்பூர் ராஜு, தி.மு.க., வேட்பாளரான நகராட்சி தலைவர் கருணாநிதி, சாத்துார் தொகுதி பா.ஜ., வேட்பாளரான அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர். முதலில் சுவாமி எழுந்தருளிய தேர் இழுக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இரண்டு தேர்களும் ரத வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு ஒயிலாட்டம், கோலாட்டம் நடந்தது. இதில், பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., ஜெகநாதன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !