பண்டரி பஜனை கோவிலில் மார்கழி உற்சவம்
ADDED :2100 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் பண்டரின் பஜனை கோவிலில், மார்கழி மாத உற்சவம் நடந்தது. மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, கிருஷ்ணன் கோவில் வீதியில், வேணு குல பண்டரி பஜனை திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் மார்கழி மாத உற்சவம் நடைபெற்று வருகிறது. தினமும் பஜனையும், கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெறுகின்றன. நேற்று பாசுரம் பாடி பஜனை நடந்தது. குழந்தைகள் கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடம் அணிந்து, திருவீதி உலா வந்தனர். பின்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக, விழா குழுவினர் பஜனை பாடி, மீண்டும் கோவிலை அடைந்தனர். அங்கு கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி தரிசனம் செய்தனர்.