கனி தரும் மரங்கள்
ADDED :1824 days ago
பணக்கார பெண் ஒருவர் உறவினர் குடும்பத்திற்கு பண உதவி செய்தாள். அவளது மனநிலை அறிந்த சிலர் அனாதை விடுதிக்கு நன்கொடை கேட்டனர். தாராளமாக அள்ளிக் கொடுத்தாள். கேட்டால் உதவி கிடைக்கும் என்பதை அறிந்து பலரும் படையெடுக்க ஆரம்பித்தனர். இது எரிச்சலை ஏற்படுத்தியது. உதவி கேட்டு வருவோர் மீது கோபப்பட்டு விரட்டினாள்.
அன்றிரவு ஜெபம் செய்தாள். மெதுவான குரலில் தேவனின் குரல் கேட்டது.
‘‘மகளே! பட்டுப் போன மரத்தைத் தேடி பறவைகள் வருவதில்லை. காய்த்த மரங்களையே நாடும். உன்னைக் கனி தரும் மரமாக வைத்திருக்கிறேன். மிகுதியான கனி கொடுப்பாயானால், இன்னும் ஆசிர்வதிக்க காத்திருக்கிறேன்’’ என்றது. மீண்டும் பிறருக்கு உதவ ஆரம்பித்தாள். நீங்கள் எப்போதும் கனி தரும் மரங்களாக இருங்கள். வருமானத்தில் ஒரு பகுதியை தர்மம் செய்யுங்கள்.