திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்
ADDED :1733 days ago
திருவண்ணாமலை: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், பாரசக்தியம்மனுடன் மாடவீதியில் ‘திருவூடல்’ நிகழ்ச்சியில் எதிர் எதிரில் சுவாமிகள் ஆடிய காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி, ‘‘அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என கோஷம் எழுப்பினர். அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.