உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்

கும்பகோணத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்

கும்பகோணம், ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் அலுவலகத்தில்,தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.

உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்து தமிழர் பண்பாட்டுக்கும் வாழ்விற்கும் வழிகாட்டியாக விளங்கிய திருவள்ளுவப் பேராசானைப் போற்றும் விதமாக, ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல்விழா என்பது ஒருங்கிணைந்த ஒரு விழாவாகும். விவசாயத்தை போற்றும் பொங்கல் விழா,மாட்டுப்பொங்கல் காணும் பொங்கல் என்று நமக்கான வாழ்வாதாரமான  இயற்கையைப் போற்றி நன்றி செலுத்தும் விழாவாகவும் அந்தவகையில் தை மாதம் 2ஆம் நாளை, திருவள்ளுவர் தினமாக தமிழ் அறிஞர்கள்  அடையாளப் படுத்தினார்கள். அதனடிப்படையில் நேற்று (15.01.2021)  வெள்ளிக்கிழமை கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் அலுவலகத்தில் திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு.திருவடிக்குடில் சுவாமிகள் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார் வள்ளுவரையும் பருவத்தையும் கடைபிடித்துப் போற்ற கேட்டுக்கொண்டார்கள். தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்பு பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலமாக இலவசமாக வழங்குகிறார்கள். அதில் ஒரு திருக்குறள் புத்தகத்தையும் வரக்கூடிய ஆண்டுகளில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !