திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED :1729 days ago
காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை மற்றும் சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நேற்று பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை மற்றும் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்தனர்.நளன்குளத்தில் குளிக்கத் தடை உள்ளதால் தேங்கியுள்ள மழைநீரை பக்தர்கள் தலையில் தெளித்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிஸ்கட், தண்ணீர் வழங்கினர். பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். எஸ்.பி.,ரகுநாயகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.