புத்தேரி பெருமாள் கோவிலில் மார்கழி நிறைவு சிறப்பு பூஜை
ADDED :1729 days ago
பெண்ணாடம் : மார்கழி மாத நிறைவையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இதனையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்; காலை 8:15 மணியளவில் பிரகாரத்தில் உள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு விசேஷ திருமஞ்சனம், 8:30 மணியளவில் வைகுண்ட மண்டபத்தில் வைக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு யதாஸ்தானம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்தனர்.