தீவனுார் விநாயகர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED :1818 days ago
திண்டிவனம் : தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், காணும் பொங்கலை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டிவனம் அடுத்த தீவனுார் கிராமத்தில், பிரசித்தி பெற்ற சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு, அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா அபிேஷகத்தை தொடர்ந்துனா காலை 5:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.காலை முதல் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் சகுந்தலாம்பாள் மற்றும் கோவில் பூசாரிகள் செய்திருந்தனர்.திண்டிவனம் டி.எஸ்.பி., கணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.