நந்திகேஸ்வரருக்கு சந்தனகாப்பு அலங்காரம்
ADDED :1728 days ago
காரைக்கால் : காரைக்கால் சவுந்தரம்பாள் ஒப்பில்லாமணியன் கோவிலில் மாட்டு பொங் கலை முன்னிட்டு நந்தி கேஸ்வரருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. மாட்டு பொங்கலை முன்னிட்டு காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் காஞ்சி சங்கர மடத்திற்கு சொந்தமான விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வனாத சுவாமி கோவில் கோசாலையிலுள்ள பசுக்கள் மற்றும் பாரம்பரிய காளைகளுக்கு கோலட்சுமி பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. பின் கோவிலை சுற்றி காளை மாடு வலம் வந்தது.காரைக்கால் வடமறைக்காட்டில் சவுந்தராம்பாள் சமேத ஒப்பில்லாமணியன் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.