உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனியப்பன் கோவிலில் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

முனியப்பன் கோவிலில் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

சேலம்: வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில், இரு நாளில், 500 ஆடுகள், 1,000 கோழிகள் பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல் பண்டிகை கரி நாளில், சேலம், வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில், பக்தர்கள், நேற்று முன்தினம் காலை முதலே வந்து, ஆடு, கோழிகளை பலியிட்டனர். தொடர்ந்து, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்றும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரு நாளில், 500 ஆடுகள், 1,000 கோழிகள் பலியிட்டு இருப்பது, கோவில் நிர்வாகம் சார்பில், வினியோகிக்கப்படும் கட்டண சீட்டு மூலம் தெரிய வந்ததாக, கோவில் ஊழியர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !