விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4959 days ago
தேவகோட்டை:தேவகோட்டை அருகே தளக்காவயல் கிராமத்தில் உள்ள வலம்புரி அமிர்த கலச செல்வ விநாயகர் கோயில் புதிதாக கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.திருமூலநாத குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் யாகசாலை பூஜை நடத்தினர். கப்பலூர் ராமசாமி அம்பலம் பங்கேற்றார். கோயில் நிர்வாகிகள் பூங்குடி செல்லம் குடும்பத்தினர் மற்றும் செல்லம் அக்வா வாட்டர் நிறுவன ஊழியர்கள் வரவேற்றனர்.