வரம் தரும் வாகனம்
ADDED :1740 days ago
பெண் முகமும், பசுவின் உடம்பும் கொண்டது தேவலோகப் பசுவான காமதேனு . பாற்கடலில் இருந்து பிறந்த இந்தப் பசு, கேட்டதை எல்லாம் வாரி வழங்கும் தன்மை கொண்டது. உலகத்தின் தாயான காமாட்சி அன்னையே காமதேனுவாக இருந்து கேட்டதை நமக்கு தருகிறாள்.என்கிறது மூகரின் பஞ்ச சதீ ஸ்தோத்திரம். கோயில் விழாக்களில் காமதேனு வாகனத்தில் சுவாமி வரும் போது தரிசித்தால் கேட்ட வரம் கிடைக்கும்.