திருப்பரங்குன்றத்தில் தெப்ப உற்ஸவம் ரத்து
ADDED :2041 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் ஜன., 24ல் நடக்க வேண்டிய தெப்ப உற்ஸவம் ரத்து செய்யப்பட்டு அன்று கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு நடக்கும். தெப்பத்திருவிழா அன்று ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளத்தில் மிதவை தெப்பம் அமைத்து சுவாமி எழுந்தருளுவார். இந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவால் தெப்ப உற்ஸவம் ரத்து செய்யப்பட்டதாக கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.