அந்தியூர் அழகுராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :1720 days ago
அந்தியூர்: அந்தியூரில், 500 ஆண்டு பழமையான, கோட்டை அழகுராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நேற்று, திருக்கல்யாண வைபவம், வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக, அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலிலிருந்து, அழகுராஜா பெருமாள் மாப்பிள்ளை அழைத்தல் நடந்தது. மேளதாளம் முழங்க, சீர் வரிசைகளுடன் பக்தர்கள், மாப்பிள்ளையை அழைத்து சென்றனர். பின், அலங்கரிக்கப்பட்ட மேடையில் திருமண வைபவம் நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் ஓத, வைபவம் நடந்தது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது.