நிறைவே காணும் மனம்
ADDED :1736 days ago
மக்காவில் வாழ்ந்த குறைஷி இனத்தவர்களில் காலித்பின் வலீத் என்னும் வீரர் இருந்தார். கடுமையாக எதிர்த்த இவரால் நாயகத்தின் படை பேரிழப்பைச் சந்தித்தது. ஆனால் சில ஆண்டுகளில் நாயகத்தின் கை ஓங்கியது. குறைஷி இனத்தின் வலிமை குறைந்ததால் மக்கா நகரை விட்டே காலித் வெளியேறினார். இதையறிந்து காலிதின் சகோதரரிடம் தொடர்பு கொண்டு, ‘‘காலித் போன்ற வீரர்கள் என்னிடம் வந்தால் உரிய கண்ணியம் அளிக்கப்படும்” என வாக்குறுதி அளித்தார் நாயகம். காலித்தும் அதை ஏற்று நட்பு கொண்டார்.
பிறரது குறைகளை விமர்சிப்பதை விட, அவர்களிடம் உள்ள நிறைகளை காண்பவனே சிறந்த மனிதன்.