நலம் விசாரியுங்கள்
ADDED :1736 days ago
* பசித்தவருக்கு உணவு கொடுங்கள். நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
* அன்புடன் பழகுபவனும், நல்ல குணம் கொண்டவனே சிறந்த நண்பன்.
* உழைத்து உண்ணும் உணவே சிறந்தது.
* நோன்பு ஒரு கேடயம். அதன் மூலம் ஒருவர் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும்.
* நற்செயல்களைச் செய்வதில் உறுதியாக இருங்கள்.
* மவுனத்தை விடச் சிறந்தது வேறொன்றுமில்லை.
* ஆசையே தீமைகளின் பிறப்பிடம்.
* மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடாதீர்கள்.
* வியர்வை உலரும் முன்பே உழைப்பவனுக்கு கூலியைக் கொடுங்கள்.
* உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
* அறிவைத் தேடுகின்ற முயற்சியைக் கைவிடாதீர்கள்.
நபிகள் நாயகம்