உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காற்றைப் பழிக்காதீர்

காற்றைப் பழிக்காதீர்


 ஒரு சமயம் வேகமாக காற்று வீசியதில் ஒருவரின் படுக்கை பறந்தது. காற்றின் மீது கோபம் கொண்டு திட்டினார் அந்த படுக்கையின் சொந்தக்காரர். அதை கேட்ட நாயகம், ‘‘ இறைவனின் கட்டுப்பாட்டில் காற்று இயங்குகிறது. காற்றை ஒருவன்  திட்டினால் அது அவனுக்கே திரும்பி விடும்’’ என்றார்.
 பொருட்களை பாதுகாப்பாகவும், தெருவில் குப்பை கூளம் சேராமலும் வைத்துக் கொள்வது நம் கடமை. தெருவில் குப்பை, மண்ணைக் கொட்டி விட்டு, ‘‘ இந்த பாழாய்ப் போன காற்று என் கண்ணுல மண்ணைப் போடுதே’’ என புலம்புவதில் பயனில்லை.  
காற்று மண்டலத்தின் துாய்மையைக் காக்க வேண்டும். அதை ஒருபோதும் பழிக்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !