ஆண்டவரை சோதிக்காதீர்
ADDED :1738 days ago
‘‘ஆண்டவர் இருக்கிறாரா இல்லையா, அவர் தவறுகளைத் திருத்துபவர் என்றால் உலகில் இவ்வளவு அட்டூழியம் நடக்கிறது என பலருக்கும் சந்தேகம் உண்டு.
அநியாயம் செய்பவர்கள் மனதிற்குள், ‘‘என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நான் சொல்வது தான் சட்டம்’’ என்று கருதுகின்றனர். நல்லவர்களாக இருப்பவர்களும் அவ்வப்போது தவறுகள் செய்ய நேரிடுகிறது. ஆனால் ஆண்டவரின் மகிமை பற்றி சந்தேகப்படக் கூடாது.
‘‘கர்த்தரை சோதிக்காமல் இருப்பாயாக’’ என்கிறது பைபிள்.