பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை
திருப்பூர் கிருஷ்ணன்
எழுத்தாளர், நாடகக் கலைஞராக இருந்தவர் கூத்தபிரான். கூத்தபிரானின் ‘மூவண்ணக் கொடி உயர்த்துவோம்!’ என்னும் சிறுவ்ர நாடகத்தை மகாபெரியவர் பார்க்க விரும்புவதாக காஞ்சிபுரம் மடத்தில் இருந்து கடிதம் வந்தது. மகாபெரியவர் தங்கியிருந்த ஓரிக்கை கிராமத்திற்கு நாடகத்தில் நடித்த பதினாறு குழந்தைகளுடன் கூத்தப்பிரான் மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். மகாபெரியவரின் முன்னிலையில் நாடகம் நடந்தது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலத்தில் நிகழும் கதை அது. அதில் பள்ளிச் சிறுவர்கள் சிலர், கொடிக்கம்பத்தில் இருந்து யூனியன் ஜாக் கொடியை இறக்கி, நம் தேசியக் கொடியை பறக்க விடுகின்றனர். இதனால் கோபம் அடைந்த ஆங்கிலேய அதிகாரிகள் சிறுவர்களை மிரட்டுவதாக கதை தொடரும்.
இந்த நாடகத்தை ரசித்த மகாபெரியவர் பொதுவாக கதர், காவியாடை விரும்பி அணிந்தவர்; இந்தியா சுதந்திரம் அடைந்தால் மட்டுமே நமது கலாசாரம், பண்பாட்டை காப்பாற்ற முடியும் எனக் கருதியவர். காந்திஜியைப் பெரிதும் மதித்தவர்.
நாடகம் முடிந்ததும் உணர்ச்சிபூர்வமாக நடித்த சிறுவர்களை தனித்தனியாக பாராட்டியதோடு பிரசாதம் கொடுத்தார். கூத்தபிரானுக்கு ‘சன்மார்க்கப் பிரசார மணி’ என்னும் விருது வழங்கினார் மகாபெரியவர்.