உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் தை கிருத்திகை விழா

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் தை கிருத்திகை விழா

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், தை கிருத்திகையான நேற்று, ஏராளமான பக்தர்கள் குவிந்து, கந்தசுவாமியை வழிபட்டனர்.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், விசேஷமாக கொண்டாடப்படும் கிருத்திகை விழாக்களில், தை கிருத்திகை முக்கியமானது. நேற்று, வழக்கம்போல், தை கிருத்திகை பிரார்த்தனைக்காக, ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வந்தனர். மொட்டையடித்து, சரவணப் பொய்கை குளத்தில் நீராடினர்.பின், கோவில் கிழக்குப்புறம், 16 கால் மண்டபம் அருகே, கற்பூரம், அகல் விளக்கு தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, நீண்ட வரிசையில் நின்று, கந்தசுவாமியை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !