உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் மாசிமக தேர் திருவிழா: மனு வழங்க தீர்மானம்

காரமடை அரங்கநாதர் மாசிமக தேர் திருவிழா: மனு வழங்க தீர்மானம்

 மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில், மாசிமக தேர் திருவிழா நடத்த அனுமதி வழங்க கோரி, முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுப்பது என, தீர்மானிக்கப்பட்டது.காரமடை தாசபளஞ்சிக திருமண மண்டபத்தில், அனைத்து இந்து சமுதாய சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 24ம் தேதி காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு வரும், தமிழக முதல்வர் பழனிசாமியிடம், காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத் தேர் திருவிழா நடத்த, அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.சுதர்சன் பட்டர், ஸ்ரீதர் பட்டர் ஆகியோர் தலைமை வகித்தனர். கிருஷ்ணன், மனோகரன், கோவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !