உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை உண்டியலில் ரூ.24 லட்சம் காணிக்கை

சிவன்மலை உண்டியலில் ரூ.24 லட்சம் காணிக்கை

திருப்பூர்:காங்கயம், சிவன்மலையில் புகழ்பெற்ற ஸ்ரீ சுப்ரமணியசாமி கோவில் உள்ளது.கோவிலில், நிரந்தர உண்டியல், ஏழு எண்ணிக்கையில் உள்ளன. இக்கோவிலின் இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் முல்லை, வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உதவி கமிஷனர் மேனகா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறப்பு நேற்று நடந்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.அதில், 24 லட்சத்து, 29 ஆயிரத்து, 698 ரூபாயும், தங்கம், 97 கிராம், வெள்ளி இனங்கள், 860 கிராம் ஆகியன காணிக்கையாக இருந்தது. இவை, சிவன்மலை பாரத ஸ்டேட் வங்கி கிளையில், வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !