சிதம்பரம் நடராஜர் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி
ADDED :2089 days ago
சிதம்பரம் : குடியரசு தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜ கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம்.நேற்று குடியரசு தினத்தையொட்டி, நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின், கீழ வீதி ராஜகோபுரத்தில், தீட்சிதர்கள் காலை 8:00 மணிக்கு தேசியக் கொடியேற்றினர்.