தைப்பூச பாடல்!
                              ADDED :1735 days ago 
                            
                          
                           பழநி என்ற பெயரை உச்சரிப்பதே புண்ணியம் என்பார்கள். அதனால், குழந்தைகளுக்கு பழனிச்சாமி, பழனியப்பன், பழனிக்குமார் என்று ஊரையும், சுவாமியையும் சேர்த்து பெயரிடும் வழக்கமுண்டு. இந்த பெயர்களைச் சொன்னால், உடல் நோய் நீங்குவதோடு, பிறவிப்பணியும் தீர்ந்து விடும். வாழ்வில் மகிழ்ச்சி பெறவேண்டுமானால், பழநி முருகனின் திருவடியை அடைக்கலம் புக வேண்டும்.
படிக்கின்றிலை பழநித் திருநாமம்
படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை முருகா என்கிலை
முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை பரமானந்தம்
மேற்கொள விம்மி விம்மி
நவிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சம்
ஏது நமக்கு இனியே!
தைப்பூச நன்னாளில் இப்
பாடலைப் பக்தியுடன் பாடி,
பழநியாண்டவனை வழிபட்டால் நலம் உண்டாகும்.