பழநி தைப்பூச விழாவில் திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED :1813 days ago
பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தைப்பூச விழா ஜன.22 ல் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு 9:30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா நடைபெறும். இன்று (ஜன.28) மாலை 4:30 மணிக்கு தேரோட்டமும், ஜன.31ல் இரவு 7:00 மணிக்கு தெப்போற்ஸவமும் நடக்கிறது. இரவு 11:00 மணிக்கு கொடியிறக்குதலுடன் தைப்பூச விழா நிறைவடையும். ஏற்பாடுகளை செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.