உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தன் வாழ்வு

சித்தன் வாழ்வு

முருகப்பெருமானின் 3வது படை வீடு என அழைக்கப் பெறும் தலம் பழநி. அவ்வையார் தனது பாடல்களில் ’சித்தன்’ என பழநி முருகனை அழைக்கிறார். தமிழ் இலக்கியங்கள் பழநியை ’சித்தன் வாழ்வு’ எனக் குறிப்பிடுகின்றன. சேர, பாண்டிய மன்னர்கள் இங்கு வழிபட்டுள்ளனர். முருகப்பெருமானை அன்போடு நினைப்பவருக்கு ஆராத முக்தி தரும் தலம். பஞ்சாமிர்தம் என்றாலே பழநி தான். 365 நாளும் இங்கு தங்கரதம் வலம் வரும். முருகனுக்கு அபிேஷகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம் மகிமை மிக்கது. தங்கத் தேர், தங்க மயில் வாகனம் இங்குள்ளது. தமிழகக் கோயில்களில் தினமும் தங்கத்தேர் இழுப்பது இங்கு மட்டுமே. சித்தர்கள் வாழ்ந்த புண்ணியத் தலம் இது. தமிழக கோயில்களிலேய அதிக வருமானம் தரும் முதல் கோயில். 1300 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் சேரமான் பெருமானால் கட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !