நாரதர் பவனி வரும் கோயில்
ADDED :1825 days ago
பிரம்மாவின் புத்திரரான நாரதரை சிலை வடிவில் இருப்பது அபூர்வம். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சண்முகர் கோயிலில் உற்ஸவராக இருக்கிறார். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவபெருமான், அவரது ஒரு தலையை கொய்தார். அப்போது பிரம்மாவின் மகனான நாரதர், தன் தந்தை தவறு செய்யவில்லை என வாதிட்டார். இதனால், அவர் சிவ நிந்தனைக்கு ஆளானதால் அவரது இசைக் கருவியான தம்புரா வளைந்தது. பிறகு விராலிமலை முருகனின் அருளால் விமோசனம் பெற்றார். இதனடிப்படையில் இத்தலத்தில் நாரதரின் தம்புரா வளைந்த நிலையில் உள்ளது. இங்கு திருவிழாவின்போது சுவாமி முன்பாக நாரதர் உலா வருகிறார்.