சுடச் சுட சந்தனம்
ADDED :1743 days ago
அன்னதானம் ஒன்றில் மக்கள் சாப்பாட்டுக்கு முண்டியடித்துச் சென்றனர். அங்கிருந்த வெங்கடபட்டர் என்பவரிடம் கிராம நிர்வாக அதிகாரி, ‘என்னப்பா! பொது காரியத்தில சும்மா நின்னா எப்படி? சந்தனத்தை அரைத்திடு!” என்று அதிகார தொனியுடன் கட்டளையிட்டார். ‘அக்னி சூக்தம்’ என்னும் மந்திரம் ஜபித்த படி சந்தனத்தை அரைத்துக் கொடுத்தார் பட்டர். அதைப் பூசிய அனைவரும் உடம்பில் தீப்பட்டது போல துடித்தனர். விஷயம் அறிந்த கிராம அதிகாரி, ‘இது வெங்கடபட்டரின் வேலை தான்!” என்பதை உணர்ந்து கொண்டார். தெய்வீக சக்தி மிக்க அவரிடம், “ ஐயா! உங்களின் மகிமை தெரியாமல் நடந்த என்னை மன்னியுங்கள்” என்று வேண்டினார். வெங்கடபட்டர் வருண சூக்த மந்திரம் சொல்ல, சந்தனம் பூசியவர்களின் உடம்பில் குளிர்ச்சி பரவியது. பிற்காலத்தில் இந்த வெங்கடபட்டரே ‘ மகான் ராகவேந்திரர்’ எனப் போற்றப்பட்டார்.