ராமலிங்க சுவாமிகள் கோவில் ஜோதி தரிசன பெருவிழா
ADDED :1750 days ago
புதுச்சேரி - முதலியார்பேட்டையில் உள்ள ராமலிங்க சுவாமிகள் கோவில் மடத்தில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 8; மதியம் 1; இரவு 8 மணிக்கும் 7 திரை நீக்கி அருட் பெருஞ் ஜோதி காட்சி வழிபாடு நடந்தது. புதுச்சேரி வள்ளலார் இசை மன்றத்தின் மணி மாறன், ஷண்முகபிரியா குழுவினரின் திருவருட்பா வீணை இசை, குரு முனுசாமி, குரு வரதராஜன் சகோதரர்களின் திருவருட்பா கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் மடத்தின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.