சென்னியாண்டவர் கோவிலில் தரிசன விழா
ADDED :1753 days ago
கருமத்தம்பட்டி: சென்னியாண்டவர் கோவில் தரிசன விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு தைப்பூச தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். ஊரடங்கால் இந்தாண்டு தேரோட்டம் நடைபெறவில்லை. சென்னியாண்டவருக்கு திருக்கல்யாண உற்சவம் மட்டும் நடந்தது. இதையடுத்து தரிசன பூஜை நேற்று முன்தினம் நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சப்பரத்தில் எழுந்தருளி சுவாமி திருவீதியுலா வந்தார். இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.