உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூச விழா பழநியில் குவிந்த பக்தர்கள்

தைப்பூச விழா பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநி : தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநிகோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் குவிந்ததால் அடிவாரம் பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச விழா ஜன.15ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் பகுதிகளில் இருந்து அதிகளவில் பாதயாத்திரையாக பக்தர்கள் வந்திருந்தனர்.அவர்கள் காவடிகள், பால்குடங்கள் எடுத்தும், அலகு குத்தியும், பஜனைகள் பாடியவாறு, ஆட்டம் பாட்டத்துடன் வந்தனர். திண்டுக்கல், பொள்ளாச்சி, தாராபுரம் செல்லும் ரோடுகளில் பாதயாத்திரை பக்தர்கள் அணிவகுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !