உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம்

சக்தி மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர், மகாசக்தி மாரியம்மனுக்கு 6ம் ஆண்டு பால்குட அபிஷேகம் நடந்தது.

திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர், மகாசக்தி மாரியம்மன் கோவிலில் 6ம் ஆண்டு பால்குட விழா காலை 9:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரன பூஜை, பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து 10:30 மணிக்கு பெண்கள் பால்குடம் ஏந்தி கோவிலை வலம் வந்து அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம், கலசாபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு மகா சக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருலி வீதி உலா நடந்தது. பரனூர் அம்பலவாணன் அபிராமி அந்தாதி வாசித்தார். கோவில் நிர்வாகி சக்தி தலைமையில் தொழிலதிபர்கள் செல்வராஜ், தியாகு, கண்ணப்பன், சாந்திபால், முன்னால் கவுன்சிலர் தங்கராஜ் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !