அவிநாசி கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED :1753 days ago
அவிநாசி: கருவலுார், அனந்தகிரி, அமுதம் கார்டனில் உள்ள சித்தி விநாயகர், ஸ்ரீ வரசக்தி விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் கோவில், மகா கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது.கடந்த, 28ம் தேதி துவங்கிய விழாவில், சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, 9:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவினரின், ஒயிலாட்ட நிகழ்ச்சி நடந்தது. அவிநாசி, முறியாண்டம்பாளையம், பெரிய குரும்பபாளையத்தில் பால விநாயகர், ஓதிமலை ஆண்டவர் சிம்ம வாகனத்தோடு, அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. மூர்த்திகளுக்கு வழிபாடு, காப்பு அணிவித்தல், யாக பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.