காரைக்கால் கோவில்களில் கும்பாபிஷேகம்
ADDED :1753 days ago
காரைக்கால்; காரைக்கால் நிரவி அடுத்த காக்கமொழியில் உள்ள கற்பகாம்பாள் சமேத கார்கோட புரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.அதே போல் திருநள்ளாறு கொம்யூன் சேத்துார் பகுதியில் பால விநாயகர், அய்யனார், மல்லாரனர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கமலக் கண்ணன், கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., துணை மாவட்ட ஆட்சியர் ஆதாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.