5 கோவில்களில் கருட வாகனத்தில் பெருமாள்
ADDED :1752 days ago
சேலம்: கோட்டை பெருமாள் உள்பட, ஐந்து கோவில்களில், கருட வாகனத்தில் காட்சியளித்த பெருமாள் சுவாமிகளை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சேலம், கோட்டை மைதானத்தில், ஐந்து பெருமாள் சுவாமிகள், ஒரே இடத்தில் பஞ்ச கருட சேவையில் அருள்பாலிப்பது, கொரோனாவால் ரத்து செய்யப்பட்டது. இதனால், கோட்டை அழகிரிநாதர், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி, சின்னதிருப்பதி வெங்கடேசப்பெருமாள், அக்ரஹாரம் லட்சுமி நாராயணர், அம்மாபேட்டை பாவ நாராயணர் ஆகியோரின் உற்சவர்கள், கருட வாகனத்தில், கோவில்களிலேயே காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.