உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி அம்மன் கோவில் 17ல் மாசி மகம் பிரம்மோற்சவம்

காமாட்சி அம்மன் கோவில் 17ல் மாசி மகம் பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மகம் திருவிழா வரும், 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில், தினசரி அம்மன் வீதிவுலா நடைபெறும்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மகம் பிரம்மோற்சவம், வரும், 17ம் தேதி காலை, 4:30 - 5:45 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக, 16ம் தேதி இரவு, வெள்ளி மூசிக வாகனம் புறப்பாடு நடைபெறும். இவ்விழாவை முன்னிட்டு, தினசரி கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் சுவாமி புறப்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதால், காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இதற்காக, கோவில் முன் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தில் அம்மன் வீதிவுலா நடைபெறும் என, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !