உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் ஜோதியானவர்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்

வள்ளலார் ஜோதியானவர்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்

 சென்னை: வள்ளலார் காலமானவர் அல்ல; ஜோதியானவர் என, வடலுார் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தெரிவித்துள்ளது.இது குறித்து, சங்கத்தின் மாநில தலைவர், பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: வள்ளலார் என போற்றப்படும் ராமலிங்க அடிகளார், 1874 ஜன., 30ல், காலமானார் என்ற தகவல் சரியல்ல; இந்த தகவல், வள்ளலார் அடியார்கள், அபிமானிகளை புண்பட வைத்து விட்டது. வள்ளலார் காலமானவர் அல்ல; ஜோதியானவர். அவர் ஜோதியானவர் என்பதை, அரசிதழ் செய்தியும் உறுதி செய்கிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !