தை கடைசி செவ்வாய்; அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :23 hours ago
கோவை ; கோவை மாவட்டம் அன்னூர் -தென்னம்பாளையம் ரோடில் அமைந்துள்ள கோவிலில் தை மாதம் நவமி திதி மற்றும் தமிழ் மரத்தின் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டும் துர்கையின் வடிவமான அங்காளம்மன் மற்றும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது .இதில் சர்வ அலங்காரத்தில் மூலவர்கள் அங்காளம்மன் மற்றும் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அசாதம் வழங்கப்பட்டது.