இயல், இசையுடன் உடுமலை மாரியம்மன் திருவிழா: குவியும் பக்தர்கள்
ADDED :181 days ago
உடுமலை: மாரியம்மன் தேர்த்திருவிழா நோன்பு சாட்டியதும், விரதம் துவக்கும் பக்தர்கள், இயல், இசை நிகழ்ச்சிகளையும், நடத்தி, அம்மனை வழிபடுகின்றனர். திருவிழாவுக்காக கம்பம் நடப்பட்டதும், கோவில் வளாகத்திலுள்ள அரங்கிலும், குட்டைத்திடல் அரங்கிலும் பல்வேறு ஆன்மிக சொற்பொழிவுகள், பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதே போல், பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் பக்தர்கள், தேவராட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மி உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களையும் ஆடி அம்மனை வழிபடுகின்றனர். பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து, தீர்த்தம் எடுத்து வரும் போதும், இசைக்கருவிகள் முழங்க, நகருக்குள் ஊர்வலம் வருகின்றனர். அதே போல், தேரோட்டத்தின் போதும், பல்வேறு கிராம குழுவினர், தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடி, உற்சாகமாக அம்மனுக்கு சேவை செய்கின்றனர்.